எல்.ஐ.சி. பற்றி ஒரு சிறப்பு கண்ணோட்டம் :
எல்.ஐ.சி. ஆப் இந்தியா - இது ஒரு இந்திய அரசின் பொது துறை நிறுவனம் .
எல்.ஐ.சி. யால் வழங்கப்படுகின்ற பாலிசிகளை பொறுத்தவரை அவற்றிற்குரிய காப்பீட்டு தொகைகள் , அவற்றின் கீழ் அறிவிக்கப்படும் இலாபத் தொகைகள் அனைத்தும் உரிய சமயத்தில் பணமாக அளிக்கப்படுவதற்கான பொறுப்புறுதியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
எல்.ஐ.சி. யின் தலைமை அலுவலகம் - மும்பை. ( CENTRAL OFFICE )
தலைமை அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மும்பை, போபால் , கான்பூர், கொல்கத்தா , புது டெல்லி ,பாட்னா , ஹைதராபாத், சென்னை, ஆகிய எட்டு இடங்களில் மண்டல அலுவலகங்கள் . ( ZONAL OFFICES )
மண்டல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா முழுவதிலும் 113 கோட்ட அலுவலகங்கள் ( DIVISIONAL OFFICES )
கோட்ட அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 2048 கிளை அலுவலகங்கள் ( BRANCH OFFICES ) , 1346 செயற்கைக்கோள் தொடர்பு அலுவலகங்கள் ( SATELITE SAMPARK OFFICES ) மற்றும் 1242 சிறிய அலுவலகங்கள் ( MINI OFFICES )
1,20,388 ஊழியர்கள் மற்றும் 11,95,916 காப்பீட்டு ஆலோசகர்கள் கொண்ட இந்திய அரசு நிறுவனம்
அனைத்து அலுவலகங்களும் முற்றிலும் கணிப்பொறி வசதியுடன் உள்வளை இணைவட்டம் ( WIDE AREA NET WORK ) திட்டத்தின் மூலம் இணைப்பு.
இந்தியாவின் அனைத்து கிளைகளிலும் பிரீமியம் செலுத்தும் வசதி மற்றும் பாலிசி சேவைகள் பெறும் வசதி .
முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து வங்கி கணக்கின் மூலமாகவும் (Electronic Clearing System ) பணம் செலுத்தும் வசதி.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொலைபேசி மூலம் பாலிசி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி ( I V R S = INTEGRATED VOICE RESPONSE SYSTEM ) . இதற்காக இந்தியா முழுவதிலும் ஒரே தொலைபேசி எண் : 1251. மற்றும் தொடுதிரை மூலமாகவும் ( K I O S K S ) பாலிசி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி .
இந்தியாவிற்கு வெளியே இலண்டன் , பிஜித் தீவுகள் , மொரீஷியஸ் , கென்யா , நேபாளம் , ஸ்ரீ லங்கா , சிங்கப்பூர் , மற்றும் பஹ்ரைன் ஆகிய இடங்களிலும் எல்.ஐ.சி.யின் கிளைகள் .
எல்.ஐ.சி. பற்றிய முழு விவரங்களையும் www.licindia.in இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வசதி .